கிரக ஓரையும், அதன் பயனும்-Kiraga orai
கதிரவன் உதிக்கும் நேரம் தொடங்கி ஒவ்வொரு கிரகத்தின் ஆதிக்க நேரத்தை ஓரை என்பர். ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரை கிடையாது.
சூரிய ஓரை
சூரிய ஓரை நேரத்தில் வேலைக்கு முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். பாக பிரிவினை, பாத்திரப் பதிவு செய்தால் நன்மையில் முடியும். மேல் அதிகாரிகளைச் சந்தித்தால் நன்மை உண்டாகும். வேலைக்கானப் பதவி பொறுப்பை ஏற்கலாம். நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்டால் நோய் குணமாகும். வேலை மற்றும் உயர் படிப்புக்கு விண்ணப்பித்தால் முன்னேற்றம் கிடைக்கும். உயர் அதிகாரியைச் சந்தித்தால் உதவி மற்றும் ஆலோசனைக் கிடைக்கும்.
சந்திர ஓரை
சந்திர ஓரை நேரத்தில் மாடு, ஆடு முதலிய கால்நடைகளை வாங்கலாம். கல்வி கற்கத் தொடங்கலாம். நகைகள் வாங்கினால், மேலும், நகை வாங்ககூடிய வாய்ப்பு கிடைக்கும். துணி, மணி வாங்கலாம். கல்யாணத்திற்கு நாள் குறிக்கலாம். பெண் பார்க்கலாம்.
செவ்வாய் ஓரை
செவ்வாய் ஓரை நேரத்தில் தெய்வ வழிப்பாட்டை மேற்கொள்ளலாம். சுப காரியங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
புதன் ஓரை
புதன் ஓரையில் படிப்பு சார்ந்த முயற்சிளைத் தொடங்கலாம். சுப காரியங்கள் குறித்து பேசலாம். போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தால் வெற்றி நிச்சயம்.
குரு ஓரை
குரு ஓரையில் அனைத்து சுபகாரியங்களையும் செய்யலாம். திருமணத்திற்கு நகை, ஆடை வாங்கலாம். தொழில் தொடங்கினால், லாபம் நிச்சயம். விவசாயம் இந்நேரத்தில் செய்தால் விளைச்சல் பன்மடங்கு பெருகும்.
சுக்கிர ஓரை
சுக்கிர ஓரை நேரத்தில் திருமணத்திற்கு நாள் குறிக்கலாம். ஆடை மற்றும் நகைகள் எடுக்கலாம். புதிய பொருட்கள் வாங்கலாம். இந்நேரத்தில் மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகும்.
சுப ஓரைகள்
குரு, சுக்கிரன், சூரியன், வளர்பிறை சந்திர ஓரை ஆகியவை சுப ஓரைகளாகும்.
அசுப ஓரைகள்
செவ்வாய், சனி, கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறை சந்திர ஓரை ஆகியவை அசுப ஓரைகளாகும்.
இதையும் படிக்கலாமே –
கௌரி பஞ்சாங்கம் இன்றைய நல்ல நேரம்…- Gowri panchangam parkum murai
Pingback: கௌரி பஞ்சாங்கம் இன்றைய நல்ல நேரம்…- Gowri panchangam parkum murai