குழந்தையின் அழுகை நிறுத்துவது எப்படி?-How to control baby crying
கள்ளம் கபடம் இல்லாத குழந்தை அழுவதைப் பார்த்தாலே அனைவரது மனமும் கரையும். குழந்தையின் அழுகையைச் சமாதானம் செய்து அழுகையை நிறுத்தச் செய்வர்.
குழந்தையின் அழுகைக்கான காரணங்கள்
குழந்தையின் பாஷையே அழுகைதான். குழந்தை அழுவதற்கு பெரும்பாலும் மூன்று காரணங்கள் தான். பசியால் அழும். உறக்கத்திற்காக அழும். சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிட்டால் அழும்.
உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தை பசியின் காரணமாக அழுவும். அதன் பசியினை உடனே போக்க வேண்டும். குழந்தை பசியால் அழும் போது கட்டயமாக பால் கொடுக்க வேண்டும்.
உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிட்டால் குளிர் தாங்காமல் அழுவும். அப்போது குழந்தையைச் சுத்தம் செய்துவிட்டு, பின்னர் உறங்க வைக்க வேண்டும்.
சில குழந்தைகள் உறக்கத்திற்காக அழும். அப்போது குழந்தையைத் தாலாட்டி, பாடல் பாடி உறங்க வைக்க வேண்டும். குழந்தையைத் தோள் மீது போட்டு உறங்க வைக்கலாம். குழந்தையின் தலையை மெதுவாக நீவி விட்டால் குழந்தை உறங்கும்.
குழந்தையின் அழுகையை நிறுத்தச் செய்வது எப்படி
சில குழந்தைகள் நீண்ட நேரம் அழுது கொண்டே இருக்கும். குழந்தையின் அழுகைக்கான காரணம் தெரியாமல் பெற்றோர்கள் தவிப்பார்கள்.
அப்போது குழந்தையை வெளியே அழைத்து வந்து, அருகில் உள்ள மரம், செடிகளைக் காட்டினால் குழந்தைகள் அழுகையை நிறுத்தும்.
தாயின் கருவறையில் பாதுகாப்பாகவும், வெதுவெதுப்பாகவும் இருந்த குழந்தை, பாதுகாப்பு இன்மையின் காரணமாக அழும். அப்போது தாய் குழந்தையைத் தூக்கி தன் அரவணைப்பைக் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.
குழந்தையை வேகமாக குலுக்குவதாலும், பல கை மாறிக்கொண்டே இருப்பதாலும் சில குழந்தைகள் அழும். எனவே, குழந்தைகளை வேகமாக குலுக்கக் கூடாது.
இதையும் படிக்கலாமே –
மாலைக்கண் நோய் வராமல் இருக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்-Malai kan
Pingback: அரிப்பு முழுவதுமாக நீங்க செய்ய வேண்டியவை என்ன?-Itching remedies