உடற்பயிற்சி அவசியம்-Excercise benefits
Excercise benefits- உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் முறையான உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் குறையும்.
உடற்பயிற்சி அவசியம் -Excercise benefits
உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலும், மனமும் பாதுகாக்கப்படுகிறது. நாம் அன்றாடம் செய்யக்கூடிய வேலைகளே மிகச்சிறந்த உடற்பயிற்சிக்குச் சான்றாகும். நடத்தல், ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், விளையாடுதல், நடனம் என் அனைத்துமே உடலையும், மனதையும் பலப்படுத்தக்கூடியது ஆகும்.
காலை, மாலை என இருவேளையும் உடற்பயிற்சி செய்யலாம். பெரும்பாலும் காலையில் உடற்பயிற்சி செய்வது நல்லது. காலையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலானது சுறுசுறுப்பாக இருக்கும். காலையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மன அமைதியாக இருக்கும். மேலும், கவனச்சிதறல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைகிறது.
உடற் பயற்சி செய்வதன் மூலம் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் கோபமானது கட்டுக்குள் வரும். இதய படபடப்பு குறையும்.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு சீராக இருக்கும்.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் செரிமானம் சார்ந்த பிரச்சனை நீங்கும். உடல் செயல்பாடு நன்றாக இருக்கும். உடலானது ஆரோக்கியமாகவும், புத்துணர்வாகவும் இருக்கும். இரவில் நன்றாக துக்கம் வரும்.
இதையும் படிக்கலாமே –
இனி இதயம் சார்ந்த நோயால் கவலைப்படத் தேவையில்லை-Heart problem