சிறுநீரக கற்கள் கரைய வேண்டுமா? இந்த ஐந்து பொருட்கள் போதும்-Kidney stone karaiya
உணவில் போதிய அளவு கால்சியம் இல்லாத காரணத்தாலும், உடலில் அதிகளவு உப்பு சேர்வதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. இதனால். சிறுநீர் அடர்கரைசலாக வெளியேறும். சிறுநீர் கழிக்கும் போது மிகுதியான வலியும், எரிச்சலும் ஏற்படும். சிறுநீரகத்தில் கற்கள் உருவானால் வயிற்றின் பக்கவாட்டில் மிகுதியான வலி ஏற்படும். சிறுநீரகம் தன் பணியை மெதுவாக செய்ய ஆரம்பிக்கும். சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் கற்களைக் கரைக்கக்கூடிய மிக எளிமையான வழிகளைக் காண்போம்.
துளசி – Kidney stone karaiya
துளசி இலைகளைப் பறித்துக்கொள்ளவும். இலையை நன்றாக கழுவிக்கொள்ளவும். பின்னர், இலையை அரைத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சாறில் தேன் கலந்து காலை,மாலை இருவேளையும் பருகி வந்தால் சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் கற்கள் கரையும்.
எலுமிச்சை – Kidney stone karaiya
நன்றாக பழுத்த எலுமிச்சைப் பழத்தை சாறு பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தயிரைக் கலந்துக்கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்து வந்தால், சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் கற்கள் கரையும்.
தக்காளி – Kidney stone karaiya
நன்றாக பழுத்த தக்காளியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் கலந்தக்கொள்ளவும். இதனை குடித்து வந்தால், சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் கற்கள் கரையும்.
இதையும் படிக்கலாமே- செரிமானக் கோளாறு நீங்க வேணுமா? இத செய்யுங்க போதும்- Digestion problem sariyaga
நெருஞ்சில்
நெருஞ்சில் செடியின் வேரைக் கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீர் நன்றாக சுண்டவுடன் வடிகட்டிக் கொள்ளவும். இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இந்த நீரை அருந்தி வந்தால் சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் கற்கள் கரையும்.
முள்ளங்கி – Kidney stone karaiya
முள்ளங்கியை அதிகளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முள்ளங்கியை அரைத்து சாறைப் பருகி வந்தால், சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் கற்கள் கரையும். முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகத்தில் உள்ளக நச்சுகள் வெளியேறும்.
அகத்தி கீரை – Kidney stone karaiya
அகத்தி கீரையை நன்றாக சுத்தம் செய்து வேக வைக்கவும். அத்துடன் உப்பு மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர், இந்த தண்ணீரை வடிகட்டிப் பருகினால் சிறுநீரக கற்கள் கரையும்.
வாழைத்தண்டு – Kidney stone karaiya
வாழைமரம் அனைவரது வீட்டிலும் வளரக்கூடிய மரம். வாழைத்தண்டை சமைத்து சாப்ப்ட்டால் சிறுநீரக கற்கள் கரையும். வாழைத்தண்டை சுத்தம் செய்து, அரைத்து சாறாகப் பருகினால் சிறுநீரக கற்கள் பிரச்சனை முற்றிலும் குணமாகும்.
Pingback: செரிமானக் கோளாறு நீங்க வேணுமா? இத செய்யுங்க போதும்- Digestion problem sariyaga