மறந்தும் கூட மாலை நேரத்தில் இதை செய்யாதீங்க-Malai nerathil seya kudathavai
கதிரவன் மறையும் மாலை நேரத்தில் நாம் என்ன நினைக்கிறோமோ, என்ன பேசுகிறோமோ அது நடக்கும் என்பது ஐதீகம். எனவே, மாலை விளக்கு ஏற்றும் நேரத்தில், வீட்டைச் சுற்றி நேர்மறை எண்ணங்களை உருவாக்க வேண்டும். அந்நேரத்தில், நேர்மறையான வார்த்தைகளை மட்டுமே பேச வேண்டும். முடியாது, நடக்காது போன்ற எதிர்மறை வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும்.
மாலை ஆறு மணிக்கு மேல் யாரையும் திட்டவோ, சாபமிடவோ கூடாது. எதிர்மறை வார்த்தைகளைப் பேசக்கூடாது. நல்லது நடக்கும், வெற்றி உண்டாகும் போன்ற நேர்மறையான வார்த்தைகளைப் பேச வேண்டும். நாம் மாலை நேரத்தில் நல்ல செயல்களைச் செய்தால், அதன் மூலம் நல்ல வளமான வாழ்க்கையே நமக்குக் கிடைக்கும். எதிர்மறை வார்த்தைகளைப் பேசினால், அதன் விளைவு நம்மையேத் தாக்கும்.
மாலை விளக்கு வைத்தப்பிறகு வீட்டிலிருந்து பணம், பால், உப்பு இவற்றை யாருக்கும் தரக்கூடாது. அதை மீறி தந்தால், வீட்டில் செல்வம் தங்காது.
மாலை நேரத்தில் பெண்கள் தலையை விரித்து போட்டுக்கொண்டு இருக்கக்கூடாது. விளக்கு வைக்கும் நேரத்திற்கு முன்னாக தலை சீவ வேண்டும். மாலை நேரத்தில் நகம் வெட்டக்கூடாது. ஆண்கள் தாடி மற்றும் முடி வெட்டக்கூடாது.
மாலை விளக்கும் வைக்கும் நேரத்தில் யாரும் உறங்கக் கூடாது. குழந்தை மற்றும் நோயுற்றவர், வயதானவர் உறங்கலாம். மீறி உறங்கினால், கடன் சுமை அதிகரிக்கும்.
மாலை நேரத்தில் துணி துவைக்கக்கூடாது. ஈர துணிகளைக் காய வைக்க கூடாது. அதை மீறி மாலை நேரத்தில் துணி துவைத்தாலோ, துணிகளைக் காய வைத்தாலோ வீட்டில் உள்ள குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, மாலை நேரத்தில் துணி துவைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மாலை நேரத்தில் துணி தைக்க கூடாது. மீறினால் வறுமை வந்து சேரும்.
இரவில் வீட்டைப் பெருகினால், குப்பையை வெளியில் கொட்டக்கூடாது. வீட்டின் உள்ளேயே வைக்க வேண்டும். காலையில் எழுந்து வெளியில் கொட்ட வேண்டும்.
மாலை நேரம் என்பது எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்த வேளையாகும். அந்நேரத்தில், தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் வளமான வாழ்க்கையைப் பெறலாம்.
இதையும் படிக்கலாமே –
மகா லட்சுமி அருளால் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும்…
Pingback: அமாவாசை அன்று மறந்தும் கூட இதை செய்யாதீங்க-Amavasaya