குமட்டல் இனி வரவே வாராது-Kumattal
குமட்டல் என்பது வாந்தியின் அறிகுறியாகும். குமட்டல் இருந்தால் நமது மனநிலை சீராக இருக்காது. குமட்டலைப் போக்கக்கூடிய சில வழியைக் காண்போம்…
கிராம்பு
கிராம்பு, பட்டை, சோம்பு இவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் தேன் கலந்து சாப்பிட்டால் குமட்டல் குணமாகும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சைப் பழத்தின் வாசனையை முகர்ந்து பார்த்து வந்தால் குமட்டல் உணர்வு கட்டுக்குள் வரும். எலுமிச்சைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் உப்பு கலந்து குடித்து வந்தால் குமட்டல் கட்டுக்குள் வரும்.
ஏலக்காய்
ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், வாந்தி உணர்வு குணமாகும். வாயு கோளாறு நீங்கும்.
கிராம்பு
கிராம்பை வாயில் போட்டு மென்றால், வாந்தி உணர்வு குணமாகும். வயிறு சார்ந்த பிரச்சனை குணமாகும்.
பேக்கிங் சோடா
வெந்நீரில் பேக்கிங் சோடாவைக் கலந்து குடித்தால் குமட்டல் உணர்வு சரியாகும்.
இஞ்சி
இஞ்சி, சீரகம் ஆகியவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறைக் கலந்து குடித்தால் குமட்டல் உணர்வு சரியாகும்.
நெல்லி இலை காம்பு
கறிவேப்பிலை காம்பு, நெல்லி இலையின் காம்பு, வேம்பு இலையின் காம்பு, முருங்கை இலையின் காம்பு ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர், அதில் சீரகம், மிளகு, சுக்கு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்தால் குமட்டல் சரியாகும்.