ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…
ஆவி பிடிப்பதன் வாயிலாக சளி,காய்ச்சலை விரட்டுவதோடு சரும பொலிவு மற்றும் இளமையான தோற்றத்தையும் பெற முடியும். ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் காணலாம்.
மூக்கில் உள்ள தொற்று
வெந்நீரில் எலுமிச்சை தழை, கற்பூரவல்லி , வேப்பிலை, துளசி ஆகியவற்றைப் போட்டு ஆவி பிடித்தால் மூக்கில் உள்ள தொற்றுகள் குறையும்.
தலைவலி
வெந்நீரில் தைல இலைகளைப் போட்டு, சிறிது நேரம் ஆவிப்பிடித்தால் தலைவலி குணமாகும்.
காய்ச்சல்
எலுமிச்சை பழத்தை இரண்டாக்கி அதை வெந்நீரில் போட்டு, அத்துடன் கற்பூரவல்லி இலைகளைப் போட்டு ஆவிப்பிடித்தால் காய்ச்சல் குணமாகும்.
முக பொலிவு
நன்றாக தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில், மஞ்சள், எலுமிச்சை சாறு கலந்து, வேது பிடித்தால் முகமானது பொலிவு பெறும். இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.
முகப்பரு
வெந்நீரில் மஞ்சள் மற்றும் வேப்பிலை போட்டு வேது பிடித்தால், முகத்தில் உள்ள அழுக்கு வெளியேறும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். முதுமை தோற்றம் நீங்கும். முகப்பரு உடைந்து வெளியேறும்.
இதையும் படிக்கலாமே
இருமல் குணமாக இதை செய்யுங்கள் போதும்-Dry cough home remedies