சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம்- நெஞ்சு சளி நீங்க இயற்கை வைத்தியம் – Cold
Cold -மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் குளிர்ச்சியானப் பொருளைச் சாப்பிடுவதால் சளி தொந்தரவு ஏற்படுகிறது. குழந்தைகள் சளியால் பெரிதும் அவதிப்படுவர். மார்பு சளியைப் போக்கக்கூடிய மிக எளிமையான வழியைக் காண்போம்.
அடிக்கடி சளி பிடிக்க காரணம்
சளி பிரச்னை பொதுவாக வைரஸ் தொற்றால் ஏற்படுபவை. மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் குளிர்ச்சியானப் பொருளைச் சாப்பிடுவதால் சளி தொந்தரவு ஏற்படுகிறது. மூக்கில் அழற்சி, சைனஸ் கோளாறு, ஆஸ்துமா கோளாறு போன்றவை, மூச்சிரைப்பை ஏற்படுத்தலாம். அபூர்வமாக ரிப்ளெக்ஸ் என்று சொல்லப்படும், உணவுக் குழாயில் இருந்து, அமிலத்துடன் சேர்ந்து உணவு மேல் நோக்கி வருவதால் ஏற்படும் பிரச்னையையும் ஏற்படுத்தலாம்.
நெஞ்சு சளி அறிகுறிகள்
உடற்பயிற்சிக்கு பிறகு மூச்சுத்திணறல். நீண்ட நேரம் இருமல் அல்லது திரும்ப திரும்ப வரும் இருமல்
சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம்
தேங்காய் எண்ணெயை மிதமாக காய்ச்சிக்கொள்ள வேண்டும். அதனுடன் கற்பூரம் கலந்து மார்பில் தடவி வந்தால் மார்புசளியானது குணமாகும்.
வெந்நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மார்புசளியானது குணமாகும்.
பாலில் மிளகு மற்றும் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் மார்புசளியானது குணமாகும். சளியானது முழுவதுமாக நீங்கிவிடும்.
புதினா இலை மற்றும் மிளகு தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இதனை, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சளியானது முழுவதுமாக நீங்கிவிடும். இருமல் மற்றும் சுவாசக்கோளாறு முழுவதுமாக குணமாகும்.
தொண்டையில் உள்ள சளி வெளியேற
கற்பூரவல்லி , வெற்றிலை மற்றும் துளசி இவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தேன் கலந்து குடித்து வந்தால் சளி குணமாகும்.
ஆடாதோடா இலையை தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும்.
வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி, மிதமான நெருப்பில் விளக்கில் காட்ட வேண்டும். பின்னர், இதனை குழைந்தைகளின் மார்பில் பற்று போட்டால் சளி குணமாகும்
கற்பூரவல்லி இலையில் தைலம் தடவி, மிதமான நெருப்பில் விளக்கில் காட்ட வேண்டும். பின்னர், இதனை குழைந்தைகளின் மார்பில் பற்று போட்டால் சளி குணமாகும்
இதையும் படிக்கலாமே
எலும்பை வலிமை அடைய செய்யும் ஆற்றலை உடையது முருங்கைக்கீரை- Murungai Keerai Benefits