கொத்தமல்லியின் மருத்துவக்குணங்கள் – Kothamalli Benefits in Tamil
Kothamalli Benefits in Tamil-கொத்தமல்லியை வெறும் வாசத்திற்காக மட்டும் பயன்படுத்துவதில்லை. கொத்தமல்லியில் எண்ணற்ற மருத்துவக்குணங்கள் உள்ளது. மனிதனின் நோயை விரட்டி அடிப்பதில் முக்கிய இடத்தில் உள்ளது. கொத்தமல்லியில் வைட்டமின் ஏ விட்டமின் சி அதிகமாக உள்ளது.
கொத்தமல்லியின் மருத்துவக்குணங்கள் (coriander in tamil)
இரத்தசோகை
கொத்தமல்லியில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இரத்தசோகை உள்ளவர்கள் கொத்தமல்லியை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் குணமாகும். இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
சர்க்கரை அளவு
கொத்தமல்லியை உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரையின் அளவு உடனடியாக குறையும். கொத்தமல்லி விதைகளை ஊறவைத்துக்கொள்ளவும். மறுநாள் ஊறவைத்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும். இந்த தண்ணீரைப் பருகி வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
தோல் சார்ந்த நோய்கள்
கொத்தமல்லியை உணவில் சேர்த்து வந்தால், தோல் சார்ந்த நோய்கள் குணமாகும். எனவே, கொத்தமல்லியை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பார்வை திறன்
கொத்தமல்லியில் விட்டமின் ஏ உள்ளது. கொத்தமல்லியை உணவில் சேர்த்து வந்தால், பார்வை சார்ந்த கோளாறுகள் நீங்கும். பார்வை சார்ந்த நோய்கள் குணமாகும்.
கொழுப்புக்களை குறைக்கும்
சிலர் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிகளவு சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் சேர்ந்து பாதிப்புகளை உண்டாக்குகிறது. கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இவை இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த நாளங்களில் படியும் கெட்ட கொழுப்பை குறைப்பதால், மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.
மாதவிடாய் சார்ந்த பிரச்சனை
கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவும். பின்னர், இந்த நீரை வடிக்கட்டி வாரம் இருமுறை குடிக்க வேணன்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மாதவிடாய் சார்ந்த பிரச்சனை குணமாகும்.
செரிமானக் கோளாறு
கொத்தமல்லியை உணவில் சேர்த்து வந்தால், செரிமானக் கோளாறு நீங்கும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். செரிமானம் நன்றாக நடக்கும். வயிற்றில் புண்கள் ஆறும்.
அம்மை நோய்
கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்பு பண்புகள், கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளதால் அம்மை நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்தும், வைட்டமின் சி-யும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, அம்மை நோயின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது.
உடல் உஷ்ணம்
கொத்தமல்லியைச் சேகரித்து வெறும் வாயாகச் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும். உடலானது குளிர்ச்சி பெறும்.
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணிப் பெண்கள் கொத்தமல்லியைச் சாப்பிட்டு வந்தால்,அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். குழந்தைகளின் எலும்புகள் பற்கள் நன்றாக வளர்ச்சி அடையும்.
வாய்ப்புண்
கொத்தமல்லி இலையில் வாசனை எண்ணெயான சிட்ரோநெல்லோல் என்ற சிறப்பான கிருமிநாசினி வேதிப்பொருள் உள்ளது. எனவே கொத்தமால்லி இலைகளை சாப்பிட்டு வந்தால் வாயிலுள்ள புண்ககள் ஆறவும், வராமலும் தடுக்கவும், சுவாசம் புத்துணர்ச்சி பெறவும் உதவுகிறது.