முகம் மற்றும் தோலை அழகாக்கும் பப்பாளி – Papaya Benefits in Tamil
Papaya Benefits in Tamil–பழங்களின் ஏஞ்சல் என்று பப்பாளி பழம் அழைக்கப்படுகிறது. பப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துகள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால், செரிமானம் எளிதில் நடைபெற்று, மலச்சிக்கல் குணமாகும். பப்பாளிப்பழம் நன்கு கனிந்த பின் பார்த்தால், அதன் நிறம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். பப்பாளியில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, ரிபோபாப்பைன் என்சைம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் இ, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
பப்பாளியின் பயன்கள்… Papaya Benefits in Tamil
- செரிமானம் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கும்.
- மலச்சிக்கலைக் குணமாக்கும்.
- புற்றுநோயைக் குணப்படுத்தும்.
- ஆஸ்துமாவைக் குணப்படுத்தும்.
- மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளைக் குணப்படுத்தும்.
- எலும்பைப் பலப்படுத்தும்.
- பல் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கும்.
- கல்லீரல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தும்.
- தோலை மெழுகுட்டும்.
- உடல் எடையைக் குறைக்கும்.
- முகச்சுருக்கம் குணமாகும்.
- நரம்பு தளர்ச்சி குணமாகும்.
- முகப்பரு குணமாகும்.
- உடல் எடை குறையும்.
பப்பாளி பழம் பழுத்தவுடன் பச்சையாக சாப்பிடுவதே சிறந்த வழி. இருப்பினும், இது இனிப்புகள், சாலடுகள் ஆகியவற்றில் சேர்த்துக்கொள்ளலாம்.
பப்பாளியில் உள்ள ஒருசில ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலினுள் அளவுக்கு அதிகமாகும் போது, அதனால் அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அப்படியே உடலினுள் தங்கி, அதன் காரணமாக உடல் வெப்பம் அதிகரிக்கும்.
பழங்கள் சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடும். எனவே சில மணி நேரத்துக்கு முன்னதாகவே பழங்களை சாப்பிட்டு முடித்திருந்தால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். இரவில் பப்பாளி, அவகேடோ, கிவி, வாழை போன்ற பழங்களை சாப்பிடலாம்.
பப்பாளியின் நன்மைகள்… Papaya Benefits in Tamil
பப்பாளியின் நறுக்கிய உட்பகுதி துண்டுகளை முகப்பரு உள்ளவர்கள் தங்களது முகத்தில் மென்மையாக தேய்த்து வந்தால், பருக்கள் நீக்குவதோடு மட்டுமின்றி முக சுருக்கங்கள் நீங்கி முகமானது பொலிவு பெறும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக்கி பிசைந்து தேன் கலந்து முகத்தில் தடவி, பின்பு வெந்நீரால் முகத்தைக் கழுவி வந்தால் முகச்சுருக்கம் மறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் நனைத்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சியானது குணமாகும்.
பப்பாளிக்காயை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
தினமும் காலையில் பப்பாளிப்பழத்தை துண்டுகளாகவோ அல்லது பழச்சாறாகவோ சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.
குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை அடிக்கடி கொடுத்தல் உடல் வளர்ச்சி துரிதமாகும்.
பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவானது கட்டுக்குள் வரும்.
பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், செரிமான கோளாறுகள் நீங்கி, நன்றாக செரிமானாகும்.
பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இருதய நோய்களை வாராமல் தடுக்கும்.
பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
பப்பாளியின் கனிந்த பகுதியைச் சாப்பிட்டு வந்தால் புற்றுநோயனாது குணமாகும்.
பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூசினால் தேள் விஷமானது குறையும்.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டியின் மேல் வைத்து கட்டினால், கட்டியானது உடையும்.
பப்பாளி பாலை தலையில் ஏற்படும் புண்களின் மீது தடவினால் புண்கள் குணமாகும்.
பப்பாளி பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்ணின் மீது தடவினால், சேற்று புண் குணமாகும்.
பப்பாளி இலையை நீரில் வேகவைத்து, அந்த நீரை உடலில் வலி உள்ள இடத்தைக் கழுவினால், உடல் வலியானது குணமாகும்.
பப்பாளி இலை பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிக்கும் மருந்தாக அமைகிறது.
காலை, மாலை இருவேளையும் பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளியின் மருத்துவ குணத்தைப் பற்றி அறிந்து, அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நன்மை பயக்கும்.
இதையும் படிக்கலாமே
இரத்த சோகை நெருங்கவே நெருங்காது இந்த நித்ய கல்யாணி செடியால் – NithyaKalyani Benefits