சொத்தை பல் புழு வெளியேற – பூச்சி பல் வலி நீங்க – சொத்தை பல் வலி குணமாக பாட்டி வைத்தியம்
பூச்சி பல் வலி நீங்க – சொத்தை பல் புழு வெளியேற-சொத்தை பல் வலி குணமாக பாட்டி வைத்தியம்- இனிப்பு சார்ந்த பொருட்களை அதிகளவு உண்ணும் போது அவை பற்குழிகளில் தேங்கி, பாக்டீரியாவுடன் வினை புரிந்து லாக்டிக் அமிலத்தை உருவாக்கச் செய்து எனாமலை அரிக்கத் தொடங்குகிறது. இதனால் பல் சொத்தையானது உருவாகிறது. பல் சொத்தையை கவனிக்காமல் விட்டால், அருகில் உள்ள பற்கள் மற்றும் வேரானது பாதிக்கத் தொடங்கும். பல் சொத்தையின் அறிகுறி பல் கூச்சமாகும். பல் சொத்தையைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் காண்போம்.
பல்
சொத்தை அறிகுறி
சொத்தைப் பல்லின் அறிகுறி, பற்கூச்சம் ஆகும். இனிப்பு சாப்பிடும்போது, குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும். பிறகு பல்லில் கடுமையான வலி ஏற்படும். உணவை மெல்லும்போது பல்லில் மிகுதியான வலி ஏற்படும்.
பல் சொத்தையைக் குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் – சொத்தை பல் வலி குணமாக பாட்டி வைத்தியம்
வேப்பங்குச்சி – சொத்தை பல் வலி குணமாக பாட்டி வைத்தியம்
வேப்பங்குச்சியினைக் கொண்டு பல் துலக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பல் சொத்தை சரியாகும். வேப்பம் சாற்றினை எடுத்துக்கொள்ளவும். அந்த சாறைப் பற்களில் தடவி, ஊற வைக்க வேண்டும். பின்பு வாயைக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பல் சொத்தையானது சரியாகும்.
வெதுவெதுப்பான நீரை – சொத்தை பல் வலி குணமாக பாட்டி வைத்தியம்
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பற்களில் தேங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறும். பல் சொத்தைக் குணமாகும்.
ஒவ்வொரு முறை உணவிற்குப் பின்னரும் வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பற்குழிகளில் தேங்கியிருக்கும் உணவுத்துணுக்குகள் வெளியேறும்.
பூண்டு – சொத்தை பல் வலி குணமாக பாட்டி வைத்தியம்
பூண்டை அரைத்துக்கொள்ளவும். அதனை உப்புடன் கலந்துக்கொள்ளவும். பின்னர், பாதிக்கப்பட்ட பல்லின் மீது தடவினால் பல்லில் உள்ள நச்சுகள் வெளியேறும். பல் சொத்தையானது குணமாகும்.
மஞ்சள் தூள் – சொத்தை பல் வலி குணமாக பாட்டி வைத்தியம்
ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூளுடன் உப்பு கலந்துக்கொள்ளவும். இதனை, பற்களில் தடவ வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரால் வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பல் சொத்தைக் குணமாகும்.
கிராம்பு – சொத்தை பல் வலி குணமாக பாட்டி வைத்தியம்
கிராம்பு எண்ணெயுடன், நல்லெண்ணய் கலந்துக்கொள்ளவும். பின்னர், பாதிக்கப்பட்ட பல்லின் மீது அந்த எண்ணெயைப் பஞ்சால் தொட்டு வைத்தால் பல் சொத்தைக் குணமாகும்.
கிராம்பை பல் சொத்தையின் மீது சிறிது நேரம் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பல்லில் உள்ள நச்சுகள் வெளியேறும். பல் சொத்தைக் குணமாகும்.
கிராம்பு தைலத்துடன் மிளகு தூள் கலந்துக்கொள்ளவும். பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் இதனை வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பல் சொத்தைக் குணமாகும்.
கடுகு எண்ணெய் – சொத்தை பல் வலி குணமாக பாட்டி வைத்தியம்
ஒரு கிண்ணத்தில் கடுகு எண்ணெயுடன் உப்பு கலந்துக்கொள்ளவும். பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் அதனை தடவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பல் சொத்தைக் குணமாகும்.
செம்முள்ளி பொடி – சொத்தை பல் வலி குணமாக பாட்டி வைத்தியம்
செம்முள்ளி பொடியை எடுத்துக்கொள்ளவும். அதனை, வெதுவெதுப்பான நீரில் கலந்துக்கொள்ளவும். அதனைக்கொண்டு வாயைக் கொப்பளித்து வந்தால் பல் சொத்தைக் குணமாகும். மேலும், செம்முள்ளி பொடியைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பல் சொத்தைக் குணமாகும்.