Archanai malargal-அர்சனையாக செய்யப்படும் மலர்கள்…அவற்றின் பயன்கள்….
Archanai malargal-கோவிலுக்குச் சென்றாலே, மனமானது அமைதி பெறும். மனதில் உள்ள பாரங்கள் மற்றும் குழப்பங்கள் எல்லாம் இறைவனைக் கண்டவுடனே விலகிவிடும். பக்திக்கு அந்த அளவிற்குச் சிறப்பு உண்டு. கோவிலுக்குச் செல்லும்போது, அர்ச்சனை கூடைகள் எடுத்துச் செல்வது வழக்கம். அர்ச்சனை கூடையில் முதன்மையான இடம் வகிப்பது மலர்கள். கடவுளுக்கு அர்சனையாக பல மலர்களைப் பயன்படுத்துவார்கள். அவற்றின் பயன்களை அறிவோம் வாருங்கள்…
அர்ச்சனை மலர்களும் பயன்களும்…
அல்லிப் பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், வீட்டில் செல்வம் பெருகும். வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும். காரியத் தடை நீங்கும்.
பூவரசம் பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், நோய் நொடி அனைத்தும் விலகும். உடலானது ஆரோக்கியமாகவும், நோய் நொடியின்றியும் இருக்கும்.
வாடமல்லி பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், மரணபயமானது நீங்கும். ஆயுள் பெருகும்.
மல்லிகை பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் பெருகும். வீண் விவாதம் குறையும்.
செம்பருத்தி பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், மன தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிவு பிறக்கும்.
காசாம் பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், நல்வாழ்வு அமையும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
அரளிப் பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், கடன் தொல்லை அனைத்தும் விலகும். பண வரவு அதிகரிக்கும்.
அலரி பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் அமையும். வாழ்க்கையின் மீது பிடிப்பு அதிகரிக்கும்.
ஆவாரம் பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், நினைவாற்றல் பெருகும். அறிவு தெளிவாகும். கல்வி ஞானம் பெருகும்.
கொடிரோஜா பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் பெருகும். வீண் விவாதம் குறையும்.
மருக்கொழுந்தால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். பெரியோர்களின் ஆசீர்வாதம்,உதவி கிடைக்கும்.
சம்பங்கி பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், பணி இடமாற்றம், வீடு இடமாற்றம் ஆகியவை நிறைவேறும். மேலும், ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே-
அபிஷேகமாக பொருட்களும் …அவற்றின் பயன்களும்….-அபிஷேக பொருட்கள் பலன்கள்
Pingback: நீங்கள் உடல் உஷ்ணத்தால் அவதிப்படுகிறீர்களா! ...உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் பாதாம் பிசின், எலுமி