மகிழ்ச்சியையும், மங்கலத்தையும் பெருக்கக்கூடிய வளையல்… வளையல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா-Valaiyal
valaiyal-சிறிய குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரும் விரும்பி அணியக்கூடிய ஒரு அணிகலன் வளையல். என்னந்தான் விலையுயர்ந்த தங்க வளையலை அணிந்தாலும், கைகளுக்குக் கூடுதல் அழகையும், மனதிற்கு மகிழ்ச்சியையும், காதுக்கு இனிய ஓசைகளையும் தரக்கூடியது கண்ணாடி வளையல்தான். கண்ணாடி வளையலின் சிறப்புகளைக் காண்போம்.
மன அமைதியைக் கொடுக்கும் வளையல்…
கண்ணாடி வளையலைக் கைநிறைய அணியும் போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வளையல்கள் ஒன்றோன்று உரசும் போது ஏற்படக்கூடிய ஓசை மன அமைதியைக் கொடுக்கும். வளையலை அணிபவருக்கு மட்டும் இன்றி உடன் இருப்பவர்களுக்கும் அது நேர்மறை எண்ணங்களை வளர்க்கும். மனதில் மகிழ்ச்சியைப் பெருக்கும்.
மன அழுத்தத்தைக் குறைக்கும் வளையல்…
கண்ணாடி வளையல் அணியும் போது மனமானது மிக லேசாக இருக்கும். மன அழுத்தம் சார்ந்த நோய்கள் அனைத்தும் பறந்தோடும். வீண்வாக்குவாதம் குறைந்து வளமான வாழ்க்கை அமையும்.
சுப நிகழ்ச்சிகள்
சுப நிகழ்ச்சிகளில் நிச்சயமாக கண்ணாடி வளையல் இடம்பெறும். கண்ணாடி வளையலானது மங்கலம் நிறைந்த ஒரு பொருளாகக் கருதப்படுகிறது. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் பெண்களு்கு கண்ணாடி வளையல் நிச்சயம் வழங்கப்படும்.
வளைகாப்பு
பெண்கள் கருவுற்றிருக்கும் போது வளைகாப்பு நடத்தப்படுவது மரபு. வளைகாப்பானது பிரசவத்தின் போது தாயும், சேயும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். அத்தகைய நிகழ்ச்சியில் கருவுற்றப் பெண்ணுக்கு கைநிறைய கண்ணாடி வளையல் அணிவது உண்டு.
கண்ணாடி வளையல் அவர்கள் அணியும்போது அந்த வளையலின் ஓசையைக் குழந்தைகள் கேட்கும். மேலும், குழந்தையின் கவன திறன் அதிகரிக்கும். புத்திக்கூர்மை, காது கேட்கும் திறன் , கவனிக்கும் திறன் என அனைத்துமே அதிகரிக்கும். வளையலின் ஓசை கேட்கும் போதெல்லாம், மிகுந்த பாதுகாப்போடு குழந்தை வயிற்றில் மகிழ்ச்சியாக இருக்கும்.
செல்வம் பெருகும்
பெண்கள் கண்ணாடி வளையல் அணிவதன் மூலம் வீட்டில் செல்வ வளமானது பெருகும். மகா லட்சுமி தேவி மகிழ்ந்து வீட்டில் நிலைத்திருப்பார். பணக்கஷ்டம் முழுவதும் நீங்கும்.
கோவில்
கோவில்களில் அம்மனுக்கு கண்ணாடி வளையலை வாங்கிக்கொடுப்பதன் மூலம் வீட்டில் மங்கலம் பெருகும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அம்மன் அணிந்த வளையலை, தானமாகப் பெற்று அணிவதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். திருமணத் தடை நீங்கும். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.
தீய சக்தி
வீடு முழுக்க வளையல் ஓசை கேட்பதால், அந்த வீட்டில் கடவுளின் ஆசியும், நம் முன்னோர்களின் ஆசியும் என்றும் நிலைத்திருக்கும். எனவே, அங்கு தீய சக்திகள் அண்டவே அண்டாது. தீய சக்திகள் பறந்தோடும்.
Pingback: தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளும், அவற்றின் சிறப்பும்-Danam kodukka vendiya porutkal