பல்லி விழும் பலன் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமாக இருக்குமா?
பல்லி தோஷம் நிவர்த்தியாக நாம் செய்ய வேண்டியது என்ன?
பல்லி விழுந்தால் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?
Palli Vilum Palan in Tamil
பல்லி விழும் பலன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக இருக்குமா?
பல்லி விழும் பலன் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு ஒரே மாதிரியாக இருக்காது. ஆண்களுக்கு வலது பக்கத்திலும், பெண்களுக்கு இடது பக்கத்திலும் பல்லி விழுவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. இதனால் நல்ல பலன்கள் கிடைக்கின்றன. அதே நேரம் பல்லி ஒரு ஆணின் இடது பக்கத்திலோ அல்லது ஒரு பெண்ணின் வலது பக்கத்திலோ பல்லி விழுந்தால், கெட்ட சகுனமாக கருதப்படுகிறது.
ஆண்களுக்கு வலது பக்கத்திலும், பெண்களுக்கு இடது பக்கத்திலும் பல்லி விிழுந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
பல்லி விழும் பலன் ஆண்களுக்கு
பல்லி விழும் பலன் ஆண்களுக்கு | ||
உடல் பாகம் | வலது | இடது |
கண் | முயற்சி தோல்வியில் முடியலாம் | நல்ல செய்தி வரும் |
கை | பிரச்சனைகள் வருவதை குறிக்கும் | அவமானத்தை சந்திக்கலாம் |
காது | தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும் | பணம் பெற்று கொள்ளும் அதிர்ஷ்டம் கிடைக்கும் |
தலை | பிரச்சனைகள் வருவதை குறிக்கும் | |
உச்சந்தலை | மரண பயம் | |
முகம் | எதிர்பாராத செல்வம் கிடைக்கும் | |
முன் நெற்றி | துணையை பிரிய நேரிடலாம் | |
மேல் உதடு | சண்டை வரலாம் | |
கீழ் உதடு | பொருளாதார தடை நீங்கும் | |
உதடு | மரண செய்தி கிடைக்கும் | |
வாய் | ஆரோக்கியம் குறித்த பயம் | |
மணிக்கட்டு | வீடு மறுசீரமைப்பு அல்லது அழகுபடுத்தும் நடவடிக்கை | |
கை | நிதி இழப்பு | |
விரல்கள் | பழைய நண்பர்களை சந்திப்பீர்கள் | |
தொடை | ஆடைகள் தொலையலாம்/ இழப்பீர்கள் | |
மீசை | தீர்க்க முடியாத கடினமான பிரச்சனைகள் வரும் | |
பாதம் | சவாலான காலமாக மாறும் | |
பின்னங்கால் | பயணத்திற்கு தயார் ஆகும் அறிகுறி | |
கால் விரல்கள் | ஆரோக்கியம் குறித்த பயம் |
பல்லி விழும் பலன் பெண்களுக்கு
பல்லி விழும் பலன் பெண்களுக்கு | ||
உடல் பாகம் | வலது | இடது |
கண் | மன அழுத்தம் ஏற்படும் | துணை உங்களை விரும்புவார் |
கன்னம் | உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் | வெற்றி உண்டாகும் |
காதின் மேற்புறம் | பொருளாதார மேம்பாடு கிடைக்கும் | வீண் கவலை உண்டாகும் |
தோள் | ரொமாண்டிக் சம்பவம் வரும் | மனதில் மகிழ்ச்சி பெருகும் |
கால் | தோல்விகளை சந்திக்க நேரிடும் | பதவி உயர்வு கிடைக்கும் |
கை | உறவினர் வருகை அமையும் | மன உளைச்சல் வரலாம் |
உதடு | பிரச்சினைகள் வரலாம் | |
கீழ் உதடு | அவமானங்களை சந்திப்பீர்கள் | |
மேல் உதடு | புதிய பொருள்கள் வாங்கும் யோகம் | |
தலை | மரண பயம் | |
தலை பின்னல் | நோய்கள் குறித்து பயம் | |
உதடு | பிரச்சினைகள் வரலாம் | |
முதுகு | மரண செய்தி வரும் | |
நகங்கள் | பிரச்சனை வரலாம் | |
கை | நிதி மேம்பாட்டை எதிர்பார்க்கலாம் | |
விரல்கள் | புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள் | |
தோள்ப்பட்டை | புதிய நகைகளை வாங்குவீர்கள் | |
முழங்கால் | உங்கள் மீது யாரேனும் அன்பு மழை பொழியலாம் | |
மூட்டு | ஏதோ பிரச்சனை வருவதன் அறிகுறி | |
கால் விரல்கள் | ஆண் குழந்தை பிறக்கும் | |
கெண்டைக்கால் | வீட்டிற்கு விருந்தாளி வருவர் |
பல்லி விழுந்தால் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?
பல்லி நம் மீது விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் இருப்பதாக பழைய சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அவற்றிக்குரிய பாரிகாரங்களைச் செய்தால் பல்லி நம் மீது விழுவதால் ஏற்படக்கூடிய கெடுதலின் தாக்கம் குறையும். பல்லி மேலே விழுந்தால் உடனே தலைக்கு குளித்துவிட்டு இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும். வீட்டிற்கு அருகே உள்ள சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற கோவில்களில் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.
அப்படி கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் , வீட்டின் பூஜை அறையிலேயே மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிப்பது மிகுந்த நன்மை பயக்கும்.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கு கோவிலில் உள்ள தங்க மற்றும் வெள்ளி பல்லியை வழிபட்டால் தோஷங்கள் விலகும். திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு சென்று பல்லியை வழிபாடு செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கர்ப்ப கிரகத்தின் மேல் கூரையில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லி உருவங்களை மனதில் நினைத்து வழிபடுவது நல்லது. அதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலிலும் இருக்கின்ற பல்லியை நினைத்து வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.
பல்லி மேலே விழுந்தால் மகா மிரித்யுஞ்ஜய மந்திரத்தைப் படித்தால் பல்லி நம் மேலே விழுவதால் உண்டாகும் தோஷமானது நீங்கும்.
தெய்வங்களுக்கு தங்கம் அல்லது தங்க ஆபரணங்கள் தானமாக அளித்தால் பல்லியானது நம் மேலே விழுவதால் உண்டாகும் தோஷம் நீங்கும்.
பல்லி தோஷம் நிவர்த்தியாக நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
பல்லியைத் துன்புறுத்துவதாலும், தெரியாமல் அதனைக் கொல்வதாலும் தோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது. பல்லி தோஷம் நிவர்த்தியாக நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைப் பற்றி காண்போம்.
பல்லி தோஷம் நிவர்த்தியாக
காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜபெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கு இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி பல்லியைத் தொட்டு வணங்கினால், பல்லியால் நமக்கு ஏற்படும் சகல தோஷங்களும் நீங்கும். மேலும், நம் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களும் முதலிய அனைத்து தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு அமையும்.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள கோவிலில் பக்தியுடன் அனைவரும் தெய்வீகத் தன்மை கொண்ட பல்லியை வணங்கி வருகின்றனர். மேலும், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலிலும் பல்லியை அனைவரும் பக்தியுடன் வணங்கி வருகின்றனர்.
தோஷம் நிவர்த்தியான வரலாறு
ஸ்ரீ சிருங்கி பேரர் என்னும் முனிவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் ஒரு நாள் பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வருவதற்காகச் சென்றனர். அவர்கள் கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லிகள் இறந்து கிடந்தன. இதை கண்ட கௌதம முனிவர் கடுங்கோபம் அடைந்தார். அவர்கள் இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டார். பின்னர், சிஷ்யர்கள் மனம் வருந்தி வேண்டிக்கொண்டதற்கு இணங்க, காஞ்சி வரதராஜர் கோவில் சென்றால் உங்களுக்கு பாவ விமோசனம் உண்டு எனக் கூறினார் கௌதம முனிவர்.
பெருமாளிடம் மோட்சம் வேண்டி நின்றனர் ஸ்ரீ சிருங்கி பேரரின் புதல்வர்கள். அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த வரதராஜ பெருமாள் உங்களின் ஆத்மா மட்டும் வைகுந்தம் செல்லும். உங்களின் சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்கும். என்னைத் தரிசிக்க வருபவர்கள் உங்களைத் தரிசித்தால் சகல தோஷமும் நீங்கி நல்வாழ்வு வாழ்வார்கள் என்று கூறினார்.
காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் உள்ள தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லிகளைத் தொட்டு வணங்கினால், பல்லி நம் மீது விழுவதால் உண்டாகும் தோஷங்கள், கிரகண தோஷங்கள் அனைத்தும் விலகும். அதே போல் பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷத்திற்கும் இக்கோவிலில் உள்ள பல்லி உருவங்களை தொட்டு வணங்கினால் அந்த தோஷம் விலகும் .
பல்லி காலில் ஏறினால் என்ன பலன் என்ன தெரியுமா?
பல்லியானது வலது காலில் ஏறினால் நாம் நம் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பல்லியானது இடது காலில் ஏறினால் நாம் நம் வீட்டில் உள்ளோரின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.