திருநீறின் மகிமை பற்றி தெரிந்து கொண்டால், தினமும் திருநீறைப் பூசிக்கொள்வீர் – Thiruneer Benefits
மனதில் நினைத்தது நிறைவேற நாள் தவறாமல் இறைவனை வணங்கி, பக்தியின் அடையாளமாக தினமும் திருநீறைப் பூசிக்கொள்வர். திருநீறு என்பது பக்தியின் அடையாளம் மட்டும் அன்று. நமது உடலையும், மனதையும் தூய்மைப்படுத்தக்கூடிய ஒரு இணையற்ற பொக்கிஷம் என்று கூறலாம். திருநீறை வலது கையில் உள்ள மோதிர விரலால் எடுத்து பூசிக்கொள்ள வேண்டும். திருநீறு பூசிக்கொள்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி காண்போம்.
திருநீறு மகிமை
திருநீறைப் பூசிக்கொள்வதால் ஞாபகத்திறன் வளரும். அறிவு ஆற்றல் பெருகும். கல்வியில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும்.
திருநீறைப் பூசிக்கொள்வதால் பாவங்கள் அனைத்தும் விலகும். இறைவனை மனதார நினைத்து, திருநீறைப் பூசிக்கொள்ளும், போது நாம் தெரியாமல் செய்த அனைத்து பாவங்களும் விலகிச் செல்லும்.
திருநீறைப் பூசிக்கொள்வதால் ஏற்படும் பயன் – Thiruneer Benefits
திருநீறைப் பூசிக்கொள்வதால் முகமானது அழகு பெறும். முகம் மட்டும் அன்றி உள்ளத்திலும் அழகு கூடும். மரியாதை மிக்க தோற்றம் கொண்டவராக காண்பிக்கும் ஆற்றலை உடையது திருநீறு.
திருநீறைப் பூசிக்கொள்வதால் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் குணமாகும். உடலானது ஆரோக்கியமாகவும், புத்துணர்வாகவும் இருக்கும்.
திருநீறைப் பூசிக்கொள்வதால் உடலில் உள்ள நோய்கள் கிருமிகள் அனைத்தும் அழியும். உடலும், உள்ளமும் தூய்மையாகும். உள்ளத்தின் தூய்மை முகத்தில் தெரியும்.
திருநீறைப் பூசிக்கொள்வதால் கண் திருஷ்டி அனைத்தும் விலகும். பில்லி சூனியம் அனைத்தும் விலகி ஓடும். வாழ்க்கையில் தடைகள் அனைத்தும் விலகிச்செல்லும். வெற்றி உண்டாகும். எடுத்த காரியம் கைகூடும்.
திருநீறைப் பூசிக்கொள்வதால் உடல் துர்நாற்றம் நீங்கும். உடலானது தூய்மையாகும்.
திருநீறைப் பூசிக்கொள்ளும் போது இறைவனை மனதார வேண்டினால், வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். எதிரிகள் நம் முன்னே வந்து நிற்க கூட அஞ்சுவர். கடன் முழுவதுமாக நீங்கும். ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு கிடைக்கும். உயர் பதவி உள்ளவரிடமிருந்து உதவி கிடைக்கும்.