கண்ணில் நீர் வடிதல் -கண் உறுத்தல் நீங்க பாட்டி வைத்தியம் – Kankatti Home Remedy
கண்ணில் நீர் வடிதல் -கண் உறுத்தல் நீங்க பாட்டி வைத்தியம் – Kankatti Home Remedy – நீண்ட நேரம் கணினி மற்றும் செல்பேசி பார்ப்பதால், கண்களில் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், கண்களில் நீரானது வடியும்.
கண்ணில் நீர் வடியக் காரணம்
கண்ணில் சுரக்கும் நீரானது, இமைகளை மூடித் திறக்கும்போது கண்ணுக்கும் மூக்குக்கும் உள்ள குழாய் வழியாகத் தொண்டையில் இறங்கிவிடும். இந்த குழாயில் அடைப்பு ஏற்படும்போது கண்ணில் நிரம்பும் நீரானது கண்ணின் வழியாக வெளியே வழியத் தொடங்கிவிடும்.
கண் சிவத்தல்
அலர்ஜி காரணமாக கண்களில் நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதிகளவில் புகை அல்லது தூசியானது கண்களில் பட்டால் கண்கள் சிவக்கும். மேலும், அரிப்பு உணர்வையும் உண்டாக்கும்.
கண்கட்டி Kankatti Home Remedy
கண்களில் பாக்டீரியா தொற்று காரணமாக கண்கட்டி உருவாகும். கண்ணுக்குள்ளே வரக்கூடிய கட்டிகளை இன்டர்னெல் ஹார்டியோலம் என்பர். கண் இமைக்கு மேலே கண்ணை ஒட்டி வெளியே வரக்கூடிய கட்டிகளை Stye என்பர் சிலருக்கு கண்ணுக்கு உள்ளே அதாவது கண் இமைகளில் உள்ளே சிறிய கட்டிகள் உருவாகும்.
கண் வீக்கம்
கண்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இது கண்களில் வீக்கத்தை மட்டுமே அதிகரிக்கும். கண் இமைகளை மூடி குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்களில் உள்ள வீக்கம் குறையும்.
கண் உறுத்தல் நீங்க பாட்டி வைத்தியம்
பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகம் மற்றும் சீரக விதைகளை ஊறவைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் அந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால், கண்ணில் உள்ள பாக்டீயா தொற்று குறையும். கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.
பசும்பால்
பசும்பாலை சிறிதளவு கண்களில் விடவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.
தயிர்
புளிக்காத பசு மாட்டு தயிரை கண்களில் விடவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.
ரோஜா இதழ்
ரோஜா இதழை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் அந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால், கண்ணில் உள்ள பாக்டீயா தொற்று குறையும். கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.
திரிபலா பொடி
திரிபலா பொடியை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் அந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால், கண்ணில் உள்ள பாக்டீயா தொற்று குறையும். கண்ணில் நீர் வடிதல் குணமாகும். கண் சிவத்தல் முதலிய அனைத்து பிரச்சனையும் குணமாகும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லைக் கொண்டு கண்களை கழுவ பயன்படுத்தலாம். மஞ்சள் துாளை வெந்நீரில் கலந்துக்கொள்ள வேண்டும். ஒரு மெல்லிய துணியை அதில் நனைத்து, கண்கள் மீது வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை நன்றாக துருவிக்கொள்ள வேண்டும். அதனைக் கொண்டு கண்களில் பற்றுப் போட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.