உடல் துர்நாற்றம் இரண்டே நாளில் சரியாக…
உடல் துர்நாற்றம் வரக்காரணம்
தினமும் குளித்தாலும் பாக்டீரியாக்களில் வளர்ச்சியின் காரணமாக உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. அதுவும் வெயில் காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. உடல் துர்நாற்றம் வீசினால், பக்கத்தில் யாரும் வரமாட்டார்கள்.
குளித்த பின்னர் உடலை நன்றாக துடைக்க வேண்டும். உடல் துர்நாற்றத்தைப் போக்கக்கூடிய சில வழிகளைக் காணலாம்.
உடல் துர்நாற்றம் நீங்க
தக்காளி சாறைப் பருகி வந்தால் உடல் துர்நாற்றம் குறையும். தக்காளி சாறு பருகுவதன் காரணமாக உடல் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. அதனால், வியர்வையும், உடல் துர்நாற்றமும் வரக்கூடிய வாய்ப்பு குறைகிறது.
குளிக்கின்ற தண்ணீரில் வெட்டி வேரைப் போட்டு குளித்தால் உடல் துர்நாற்றம் குறையும்.
வேப்பிலையை அரைத்து, அதனை அக்குள் பகுதியில் தடவி ஊற வைத்து, பின்னர் குளித்தால் வியர்வை துர்நாற்றம் குறையும்.
எலுமிச்சை சாறை எடுத்து அதனை அக்குள் பகுதியில் தடவி ஊற வைத்து, பின்னர் குளித்தால் வியர்வை துர்நாற்றம் குறையும்.
குளிக்கும் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு கரைய வைத்து, குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் குறையும்.
தண்ணீரை அதிகமாக குடிக்கும் போது உடல் வெப்பம் குறையும். அதனால் , வியர்வைச் சுரப்பது கட்டுக்குள் வரும்.
இதையும் படிக்கலாமே
உடல் சூடு குறைய இதை செய்தால் போதும்- How to control body heat…