அதிகாலையில் எழுந்தவுடன் இவற்றைப் பார்த்தால் போதும் நன்மை பெருகும்-Athikalai velaiyil parkka vendiyathu
Athikalai velaiyil parkka vendiyathu-காலையில் உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடிய பொருட்களைக் காண வேண்டும். அவ்வாறு காண்பதன் மூலம் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்வாகவும், சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் அமையும். காலையில் எழுந்ததும் எந்தெந்தப் பொருட்களைக் காணலாம் என்பதைப் பற்றி காணலாம்.
காலையில் எழுந்தவுடன் முதலில் பசுவின் முகத்தைப் பார்க்க வேண்டும். பசுவின் முகத்தைப் பார்த்தால் அன்றைய நாள் முழுக்க நன்மை கிடைக்கும். மன அமைதி கிடைக்கும். வீண் வாக்குவாதம் குறையும்.
காலையில் எழுந்தவுடன் தனது உள்ளங்கையைப் பார்த்தல் நல்லது. உள்ளங்கையில் லட்சுமி தேவி வாசம் செய்யக்கூடிய பகுதியாகும். உள்ளங்கையைப் பார்ப்பதன் மூலம் செல்வமானது பெருகும்.
தங்க நகை அணிந்த பெருமாளின் படத்தைக் காலையில் எழுந்தவுடன் பார்த்தால் பணமானது பெருகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். காரியத் தடை நீங்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
காலையில் எழுந்தவுடன் மகாலட்சுமி படத்தைப் பாரத்தால் செல்வம் பெருகும். எடுத்த காரியம் கைகூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பேரும், புகழும் கிடைக்கும்.
காலையில் எழுந்தவுடன் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பதும் நன்மை பயக்கும். காலையில் எழுந்ததும் தன் முகத்தைப் பார்ப்பதன் மூலம் தன்னம்பிக்கைப் பெருகும். மன தைரியம் பெருகும்.
காலையில் எழுந்தவுடன் தன் தாய், மனைவி, பிள்ளைகளின் முகத்தை காண்பதும் நன்மை பயக்கும். மனதில் அமைதி பெருகும். அன்றைய நாள் முழுக்க உற்சாகம் இருக்கும். ஒற்றுமை உணர்வோடு வாழ வழி கிடைக்கும்.
காலையில் கதிரவனைக் காண்பது சிறந்த பலனைத் தரும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
இயற்கை காட்சிகளைக் காண்பதன் மூலம் மனம் புத்துணர்வாக இருக்கும். மனதில் அமைதி நிறைந்திருக்கும். எண்ணத்தில் தெளிவு மற்றும் பேச்சில் தெளிவு ஏற்படும்.
காலையில் எழுந்தவுடன் கோவில் கோபுரத்தைக் காண்பதன் மூலம் மங்கலம் பெருகும். சுப நிகழ்ச்சி செய்திகள் வீடு தேடி வரும். பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்.
காலையில் எழுந்தவுடன் சிவலிங்கத்தைக் காண்பதன் மூலம் ஆயுள் பெருகும். தீராத நோய்கள் குணமாகும். குடும்பத்தில் ஒற்றுமை பெருகும். பண வரவு அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே-
வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும் -Selvam peruga